பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய இன்ஹேலர் சிகிச்சை! பெரும் சோதனை ஓட்டம் தொடக்கம்
பிரித்தானியாவில் புதிய இன்ஹேலர் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முக்கிய சோதனை தொடங்கபட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படுவதைத் தடுக்க இது உதவும் என்று நம்பப்படுகிற ஒரு புதிய சிகிச்சையின் பெரிய அளவிலான சோதனை பிரித்தானியாவில் தொடங்கபட்டுள்ளது.
இந்த சிகிச்சையில், interferon beta-1a எனப்படும் புரதத்தை காற்று போல் உள்ளிழுக்கப்படுகிறது. இந்த புரதம் பொதுவாக ஒரு வைரஸ் தாக்கும்போது உடல் தானாக உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றாகும்.
இது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும், வைரஸ்களை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கும் செல்களை உருவாக்குகிறது.
இது சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் உருவாக்கப்பட்டது மற்றும் சவுத்தாம்ப்டனை தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனமான சினேர்கென் தயாரிக்கிறது.
அலெக்ஸாண்ட்ரா கான்ஸ்டான்டின் எனும் 34 வயது பெண்மணி, இந்த புதிய சோதனையின் சிகிச்சை பெற்ற முதல் நபராவார். அவருக்கு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஹல் ராயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Synairgen நிறுவனத்தின் SG018 trial எனப்படும் இந்த சோதனை சிகிச்சைக்கு 20 நாடுகளிலிருந்து மொத்தம் 610 கொரோனா நோயாளிகள் தன்னார்வலர்களாக உட்படுத்தப்படுகின்றனர். மேலும், இந்தப் புதிய சிகிச்சைக்கு சுமார் 2,000 பவுண்ட் செலவாகும் என்று Synairgen-ன் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் மார்ஸ்டன் கூறினார்.
