ஐபிஎல் தொடரில் புதிய விதிகள் - வீரர்களுக்கு கட்டுப்பாடு
2026 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இன்று நடைபெற உள்ள 15வது லீக் போட்டியில் KKR மற்றும் LSG அணிகள் மோத உள்ளது.
ஐபிஎல் புதிய விதிகள்
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் புதிதாக சில விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளத்து.
இதன்படி, அணியில் உள்ள 16 வீரர்களின் பட்டியலை போட்டிக்கு முன்னதாக அணி நிர்வாகம் வழங்கும்.

இதில், மைதானத்தில் விளையாடும் 11 வீரர்கள் மற்றும் வீரர்கள் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானங்கள், பேட்டுகள் ஆகியவற்றை வழங்க மைதானம் உள்ளே வரலாம். அல்லது பயிற்சியாளர்கள் கூறும் செய்திகளை வீரர்களுக்கு வழங்க வரலாம்.
மற்ற வீரர்கள் யாரும் மைதானத்திற்கு உள்ளே வரக்கூடாது. மீதமுள்ள வீரர்கள் டக்அவுட்டில் அமர்ந்திருக்க வேண்டும். எல்லைக்கோட்டிற்கும், LED பலகைகளுக்கும் இடையில் அவர்கள் நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதே போல், விக்கெட் விழும் நேரத்திலோ அல்லது பவுண்டரி எல்லையிலோ மட்டுமே வீரர்களுக்கு நேர விரயம் ஏற்படாத வகையில் குடிநீர் வழங்க வேண்டும்.
நடுவர் அனுமதி இல்லாமல் கூடுதல் குடிநீர் மைதானத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது. கொண்டு வரும் வீரர்கள் முறையான கிரிக்கெட் சீருடையில் இருக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |