இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சிக்கள் வெளியீடு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சிக்கள் வெளியிடப்பட்டன.
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சி
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சியை புதிய கிட் ஸ்பான்சர்களான அடிடாஸ் வடிவமைத்துள்ளது.
ஜூன் 7-ஆம் திகதி ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தொடங்கி ஆண்கள் இந்திய கிரிக்கெட் அணி புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெர்சிகளை அணியும்.
இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சிகள் மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.
#Adidas launches new India cricket jersey ahead of WTC Final 2023 #adidasTeamIndiaJersey
— Balanced Report (@reportbalanced) June 1, 2023
The new jerseys for the Indian cricket team came as Adidas became the official kit sponsor of Team India.
Starting with World Test Championship (WTC) finals against Australia next week to… pic.twitter.com/zFzmtuU9hD
புதிய கிட் ஸ்பான்சர்- Adidas
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடந்த மாதம் அடிடாஸை (Adidas) பிசிசிஐக்கு கிட் ஸ்பான்சராக அறிவித்தது.
மார்ச் 2028 வரை இந்த ஒப்பந்தம் நீடிக்கிறது. அதாவது ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அணிகள் உட்பட BCCIக்கான அனைத்து போட்டிகள், பயிற்சிகள் மற்றும் பயண உடைகளுக்கு அடிடாஸ் மட்டுமே சப்ளையர் ஆகும்.
ஜூன் 2023 முதல், டீம் இந்தியா முதல் முறையாக மூன்று கோடுகளில் காணப்படும் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவர்களின் புதிய கிட் அறிமுகமாகும்" என்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.