கரையைக் கடந்த புயல்.., உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம்
New low pressure area likely to form in andaman- ஆந்திரா அருகே ஒர்னாப் புயல் கரையைக் கடந்த நிலையில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 30 வரை தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பநிலை மேலும் 2 முதல் 3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |