முதலிரவு அறையில் உயிரிழந்த புதுமண தம்பதி! உறவினர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் திருமணமான புதுமணத்தம்பதி முதலிரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அறையைவிட்டு வெளியேற வரவில்லை
உத்தரபிரதேசத்தின் அயோத்தியைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. பின்னர் புதுமணத்தம்பதியர் முதலிரவுக்கு சென்றனர்.
ஆனால் காலை வெகுநேரமாகியும் இருவரும் அறையைவிட்டு வெளியேற வரவில்லை. இதனால் உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர்.
எனினும் உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்றுபார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இருவரும் உயிரிழப்பு
மணமகன் பிரதீப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கியிருந்தார். மேலும் மணப்பெண் ஷிவானி கட்டிலில் பேச்சுமூச்சின்றி கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டனர் என தெரிவித்தனர்.
அத்துடன் மணப்பெனின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் பிரதீப் அவரை கொன்றுவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், புதுமணத்தம்பதி முதலிரவு அறையில் இறந்தது ஏன் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |