அம்மாவாக முதல் பதிவை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா! ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகை பிரியங்கா சோப்ரா அம்மாவான பிறகு தனது முதல் பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் தம்பதியினர் ஜனவரி 22 அன்று ஒரு வாடகைத்தாய் மூலமாக பெற்றோரானார்கள்.
இப்போது, தாயான பிறகு தனது முதல் பதிவை பகிர்ந்துள்ளார். அத்துடன், அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கடந்தவாரம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வாடகைத்தாய் மூலமாக நாங்கள் ஒரு குழந்தையை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பான தருணத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த விரும்புகிறோம். மிக்க நன்றி" என கூறியிருந்தார்.
அதன்பிறகு அவர் இப்போது தான் தனது இரண்டு செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் அந்த "The light feels right" என தலைப்பிட்டுள்ளார்.
பிரியங்காவின் இந்த பதிவு இப்போதுவரை 19 லட்சம் லைக்குகளை நெருங்கியுள்ளது.
சில மாதங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்த பிறகு, பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் டிசம்பர் 2018-ல் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர்.
ஜனவரி 22 அன்று, பிரியங்காவும் நிக்கும் வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தை பிறந்ததாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள்.
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸின் முதல் குழந்தை பெண் குழந்தை என்றும் அவர் குறைமாத குழந்தை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையைப் பற்றிய கூடுதல் விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.