இந்தியாவில் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள 15 புதிய விதிமுறைகள்
இந்தியா முழுவதும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
புதிய விதிமுறைகள்
*செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களது கணக்குகள் முடக்கப்படும்.
*2023-24 -ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் டி.சி.எஸ் (TCS) கட்டணங்களை 5% -லிருந்து 25% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
* வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தால் 20% வரி செலுத்த வேண்டும். ரூ.7 லட்சத்திற்கு குறைவாக செலவு செய்தால் 5% செலுத்த வேண்டும்.
*வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சம் மேல் கடன் பெற்றால் 0.5% குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும். மருத்துவம் மற்றும் கல்வி செலவு ஏற்பட்டால் டி.சி.எஸ். 5% வசூல் செய்யப்படும்.
* டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
* பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்தவர்கள் தங்களுடைய கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இணைக்க வேண்டும்.
* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் அதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
* தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த, காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மாற்றியமைத்த அட்டவணையை அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பின்பற்ற வேண்டும்.
* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் சொத்துக்கள் குறித்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.
* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023 அமலுக்கு வரப்போகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |