தெற்கு பிரான்சில் பரவும் மின்சார எறும்புகள்: கவலையை உருவாக்கிவரும் விடயம்
தெற்கு பிரான்சில், மின்சார எறும்புகள் என்னும் ஒருவகை எறும்புகள் பரவும் விடயம் கவலையை உருவாக்கிவருகிறது.
மின்சார எறும்புகள்
தெற்கு பிரான்சிலுள்ள Var என்னுமிடத்தில் 2022ஆம் ஆண்டு ஒருமுறையும், 2024ஆம் ஆண்டு ஒருமுறையும் இந்த மின்சார எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவை மீண்டும் பரவிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
தென் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்த மின்சார எறும்புகள், 1 முதல் 2 மில்லிமீற்றர் நீளமே கொண்ட மிகவும் சிறிய எறும்புகள் ஆகும்.
ஆனால், அவை கடித்தால் ஷாக் அடித்ததுபோல பயங்கரமாக வலிப்பதுடன், கடிபட்ட இடத்தில் எரிச்சல் நீண்ட நேரம் இருக்கும். வீக்கம் ஏற்படும், அத்துடன், சிலருக்கு அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தும்.
தாவரங்கள் மற்றும் மண் மூலமாக இந்த எறும்புகள் பிரான்சுக்கு பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். செல்லப்பிராணிகளின் கண்களின் அருகே இவை மீண்டும் மீண்டும் கடித்தால் செல்லப்பிராணிகளுக்கு பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.
அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இவை சுற்றுச்சூழலியலுக்கு பெருமளவில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. இயற்கையாக ஒரு இடத்தில் காணப்படும் எறும்பு வகைகளின் இடத்தை பிடித்துக்கொள்ளும் இந்த மின்சார எறும்புகள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றை தாக்குவதுடன், சுற்றுச்சூழலியலையே நிலையற்றதாக மாற்றுகின்றன.
தற்போது இந்த எறும்புகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள். விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் இந்த மின்சார எறும்புகளை ஒழிப்பதற்காக 2,000ஆம் ஆண்டு முதல் பல மில்லியன் டொலர்களை அந்நாடு செலவிட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |