கனடாவில் தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்
கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில், சரியாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு இதேபோல் சில புகைப்படங்கள் வெளியாகின. அவை கருப்பு வெள்ளை புகைப்படங்கள்...
அப்போது அந்த புகைப்படங்களுக்காக ட்ரூடோ வருத்தம் தெரிவித்தார். அந்த புகைப்படங்களில் முகத்திலும் கைகளிலும் கருப்பு நிறம் பூசிக்கொண்டிருந்தார் ட்ரூடோ. மேற்கத்திய நாடுகளில் இப்படி முகத்தில் கருப்பு நிறம் பூசுவது கருப்பினத்தவரை அவமதிக்கும் செயலாக, இனவெறுப்பு சார்ந்த விடயமாக கருதப்படுகிறது.
அந்த நேரத்தில் இது இனவெறுப்பு சார்ந்தது என தனக்குத் தெரியாது என்றும், இப்போதுதான் அந்த புகைப்படங்களின் தீவிரம் தனக்கு புரிகிறது என்றும் கூறி, மன்னிப்புக் கோரியிருந்தார் ட்ரூடோ.
இந்நிலையில், தற்போது ட்ரூடோ முகத்தில் கருப்பு வண்ணம் பூசியிருக்கும் வண்ணப் புகைப்படம் ஒன்று முதன்முறையாக வெளியாகியுள்ளது.
இது குறித்து ட்ரூடோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது எதிர் அணியினர் இந்த புகைப்படத்தைப் பிடித்துக்கொண்டு, ட்ரூடோ நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்து வருகிறார்கள்.
கனடாவில் தேர்தல் திங்கட்கிழமை நடப்பதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரியாக ஞாயிற்றுக்கிழமை இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துவரும் மக்களில் சிலர், அது 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், அதற்காக ட்ரூடோ மன்னிப்பும் கோரி விட்டார் என்று கூறியுள்ளார்கள்.
எதிர்ப்பவர்களோ, குழந்தைகளுக்கே இது தவறு என்று தெரியும். ஆகவே, ட்ரூடோ வேண்டுமென்றேதான் இதைச் செய்திருக்கிறார். இவரையா கனடா மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். சிலர், இவரை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய முடிவுகளைப் பார்த்தால், பலர் அப்படி நினைக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது...