50 வருட முயற்சியின் பின் ஜனாதிபதி பதவியை பிடித்த JVP: இந்தியா- இலங்கை உறவில் சிக்கல்
இலங்கையை பொறுத்தவரை தற்போது மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.
அதையடுத்து ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவானது JVP கட்சியின் 50 வருட வரலாற்றுக்கனவையும் பூர்த்தி செய்தது.
அதாவது, 55 வயதான அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
JVP கட்சியினுடைய வரலாற்றை பொறுத்தவரை இலங்கையினுடைய தேசபக்தி, இலங்கையினுடைய தனிப்பட்ட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் எந்த நாடுகளினுடைய ஆதரவும் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட சீனாவோடு நெருங்கிப் பயணிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இந்தியா - இலங்கை உறவில் சிக்கல் தன்மையும் ஏற்படலாம்.
ஆனாலும் இந்த தேர்தலின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவொரு விடிவும் வராது என மூத்த பத்திரிகையாளர் உமாபதி IBC தொலைக்காட்சியின் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்வையிடவும்.
வீடியோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |