சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதி இவர்தான்...
சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டாயிற்று.
சுவிட்சர்லாந்தின் ஆட்சிமுறை
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டுக்கான பிரதமரை சுவிஸ் நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பெடரல் கவுன்சில் என்ற வெவ்வேறு துறைகளின் தலைவர்களான 7 பேர் கொண்ட குழுதான் நாட்டை ஆண்டு வருகிறது.
அந்த குழுவிலுள்ள ஒருவர் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்பதை பலர் அறிந்திருக்கக்கூடும். இந்த பெடரல் கவுன்சில் உறுப்பினர்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுவிஸ் நாடாளுமன்றம் தேர்வு செய்யும்.
அவர்களில் ஒருவரை சுவிஸ் ஜனாதிபதியாக இதே சுவிஸ் நாடாளுமன்றம் தேர்வு செய்யும்.
@Raffael Waldner / 13 Photo
சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதி இவர்தான்
இம்மாதம், அதாவது, டிசம்பர் 7ஆம் திகதி, அடுத்த ஆண்டுக்கான, அதாவது 2023ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், பெடரல் உள்துறையின் தலைவரான Alain Berset (50).
ஏற்கனவே இவர் 2018இலும் ஜனாதிபதியாக இருந்தவர் என்பதால், இது அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் இரண்டாவது முறையாகும். இந்த Alain Bersetதான், 2022ஆம் ஆண்டு, ஜூலை மாதம், தனது தனியார் விமானத்தில் பிரான்ஸ் இராணுவ எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
@keystone/peter Schneider