பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் லிஸ் ட்ரஸ்ஸா ரிஷி சுனக்கா?: சில மணி நேரங்களில் தெரியவரும்...
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ்ஸும் ரிஷி சுனக்கும் போட்டியின் கடைசி இரண்டு வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் இன்று பிரித்தானியாவின் பிரதமராக அறிவிக்கப்படுவார்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்று (5.9.2020) முடிவாக உள்ளது.
பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய வழக்கப்படி அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவரது இடத்தில் பிரதமராக பொறுப்பேற்க ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
பிரதமர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆதரவைப் பெற்று, தற்போது பிரித்தானிய வெளியுறவுச் செயலரான லிஸ் ட்ரஸ்ஸும், முன்னாள் சேன்சலரான ரிஷி சுனக்கும் போட்டியின் கடைசி இரண்டு வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.
image - AP
அவர்களில் ஒருவர் இன்று பிரித்தானியாவின் பிரதமராக அறிவிக்கப்படுவார்.
அது லிஸ் ட்ரஸ்ஸா, அல்லது ரிஷி சுனக்கா என்பது என்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக வேட்பாளர்கள் இருவரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், அவர்களில் யார் வென்றாலும், அவர்களுக்கு பிரதமர் பதவி பஞ்சு மெத்தையாக இருக்கப்போவதில்லை.
காரணம், பிரதமராக பொறுப்பேற்பவர் கடுமையான பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
எப்படியும், அதிகபட்சம் 2025 வரை அவர் பிரதமர் பதவியில் நீடிக்கக்கூடும். ஏனென்றால், அப்போது அவர் தேர்தலில் மக்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதற்குள் மக்களுடைய ஆதரவைப் பெற்றால், அவர் தொடர்ந்து பிரதமராக நீடிக்கலாம்.