3வது டி20 போட்டியில் இந்திய அணி செய்த சாதனை - என்னன்னு தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 என அனைத்தையும் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர்.
அதேசமயம் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் நடந்த தொடரை முழுமையாக கைப்பற்றியதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் 3வது டி20 போட்டியில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது. முன்னதாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் பெரிய ஸ்கோர் குவிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் சூர்யகுமார் யடஹவ்- வெங்கடேஷ் அய்யர் ஜோடி கடைசி 5 ஓவர்களில் 86 ரன்களை குவித்து அசத்தியது. இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் குவித்த அதிகமான ரன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.