பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை! லண்டன் மேயர்
பிரித்தானியாவில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லண்டன் மேயர் சாதிக் கான் கூறியதாவது, பிரித்தானியாவில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.
பிரித்தானியாவின் விருந்தோம்பல், கலாச்சாரம் மற்றும் சில்றை வணிகத்திற்கான ஆதரவு பெரியளவில் இருப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
புதிய கட்டுப்பாடுகளை விரைவாக கொண்டுவராவிட்டால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் மற்றும் சரிவின் விளிம்பில் உள்ள NHS போன்ற பொது சேவைகளுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும்.
நாம் கிறிஸ்துமஸை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். ஆனால், விரைவில் சமூக விலகல் மற்றும் உட்புறங்களில் ஒன்றுகூடுவதற்கு எதிரான கட்டுப்பாடுகளை சந்திக்கப்போகிறோம் என சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
லண்டன் நகர மேயர் சாதிக் கான் நேற்று தலைநகரில் ‘major incident’ பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.