பிரான்சின் 63 கடலோர நகரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தென் கிழக்கு பிரெஞ்சு மாவட்டமான Alpes-Maritimes அதிகாரிகள் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி, பிரான்சின் 63 கடலோர நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, வார இறுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்படுகிறது.
அதன்படி, மக்கள் வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
இப்போதைக்கு, இந்த விதி அடுத்த இரண்டு வார இறுதி நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளுக்கு இந்த வார இறுதி பொது முடக்கம் என்பது தொடர்பான தகவல்களுக்கு...