ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானிய மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியா மக்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் Schengen நாடுகளுக்கு பயணிக்கும் போது சரியான ஆவணங்கள் வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் Schengen இரு நாடுகளும் தங்கள் பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு கடவுச்சீட்டு மற்றும் விசாக்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இதன் தொடர்பில் மாட்ரிட்டில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கட்டாயமாக கடவுச்சீட்டை எடுத்துச் செல்லவும் மற்றும் கடவுச்சீட்டு குறைந்தது மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் தூதரகம் பயணிகளை தங்கள் பாஸ்போர்ட்டை கவனமாக வைத்து கொள்ளும்படி எச்சரித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்கும் பிரிட்டன் மக்கள்கள் எப்பொழுதும் தங்கள் கடவுச்சீட்டை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இங்கிலாந்து குடிமக்கள் Schengen மண்டலத்தில் 90 நாட்களுக்கு மேல் தங்க முடியாது என்பதை நினைவுபடுத்தியுள்ளனர். பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதால் நுழைவு விதிகள் ஜனவரி 1, 2021 முதல் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.