இனி இது கட்டாயம்! பிரான்ஸ்-ஜேர்மனியில் இன்று முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்
பிரான்ஸ்-ஜேர்மனி எல்லையைத் தாண்டி பயணிக்கும் மக்களுக்கு புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
பிரான்ஸ் பிராந்தியமான Moselle-க்கும் ஜேர்மனிக்கும் இடையில் எல்லையைத் தாண்டி பயணிக்கும் மக்கள், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற antigen சோதனை முடிவை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஒப்புக் கொண்டுள்ளன என பிரான்ஸ் ஐரோப்பா அமைச்சர் Clement Beaune தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் Moselle-லிருந்து 16,000 பிரான்ஸ் தொழிலாளர்கள் கடக்கும் எல்லை பகுதியில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஜேர்மனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், இதனால் எல்லையை கடக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று Clement Beaune கூறினார்.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக Moselle மாவட்டத்தை கவலைக்குரிய பகுதியாக தொற்றுநோய்களுக்கான ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனம் வகைப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் Moselle பிராந்தியத்திலிருந்து பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று ஜேர்மனி அரசு அறிவித்தது.
Moselle-லுக்கும் ஜேர்மன் மாநிலங்களான Rhineland-Palatinate மற்றும் Saarland-க்கும் இடையிலான பொது போக்குவரத்து நிறுத்தப்படும், மேலும் Moselle-லிருந்து கார் மூலம் வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை காட்ட வேண்டும் என ஜேர்மனி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.