ஜேர்மனியிலிருந்து பிரித்தானியா செல்வதற்கான புதிய விதிமுறைகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியா செல்வதற்கான விதிமுறைகள் அக்டோபர் 4ஆம் திகதி முதல் நெகிழ்த்தப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னமும் சில கட்டுப்பாடுகளும் கொரோனா பரிசோதனை தேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
புதிய விதிமுறைகளின்படி ஜேர்மனியிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கான விதிமுறைகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய அரசு ஆம்பர் பட்டியலை நீக்கிவிட்ட நிலையில், தற்போது பச்சை மற்றும் சிவப்பு ஆகிய பட்டியல்கள் மட்டுமே நடைமுறையில் உள்ளன.
அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பச்சைப் பட்டியலின் கீழ் வருகின்றன.
ஏற்கனவே பச்சைப் பட்டியலில் இருக்கும் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளைப் பொருத்தவரையில், தடுப்பூசி பெற்றவர்களுக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான விதிமுறைகள்
முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு விமானம் ஏறும் முன் இனி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், இரண்டாம் நாளுக்கான கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்து கட்டணமும் செலுத்தியே ஆகவேண்டும். அதுவும் ஜேர்மனியிலிருந்து புறப்படுவதற்கு முன்பே செய்தாகவேண்டும்.
எல்லையில், Passenger Locator Formஐ காட்டவேண்டியிருக்கும். மேலும், அந்த விண்ணப்பப்படிவத்தை இரண்டாம் நாளுக்கான கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்த reference number இல்லாமல் பூர்த்தி செய்ய இயலாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிமுறைகள்
தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பிரித்தானியாவால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி பெற்றவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
அத்துடன், அவர்கள் ஜேர்மனியிலிருந்து பிரித்தானியா புறப்படும் முன் இரண்டாம் நாள் மற்றும் 8ஆம் நாள் கொரோனா பரிசோதனைக்காக முன்பதிவு செய்து கட்டணமும் செலுத்தவேண்டும்.
பிரித்தானியா, பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் பெற்றவர்களை மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கிறது, அத்துடன் அவர்கள் தங்கள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டும் என்பது அவசியம்.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.de/20211004/what-changes-in-october-if-youre-travelling-from-germany-to-the-uk/