சுவிட்சர்லாந்தில் புதிதாக குடியமர்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய ஐந்து விடயங்கள்
சுவிட்சர்லாந்தில் குடியமர்வதற்கு பல விதிகள், நெறிமுறைகள் உள்ளன. சில மற்ற நாடுகளைவிட வித்தியாசமானவையாக இருக்கும்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியமர்பவர்களானாலும் சரி, சுவிட்சர்லாந்துக்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் சென்று குடியமர்பவர்களானாலும் சரி, அவர்கள் இந்த ஐந்து விதிகளை அறிந்துகொள்வது அவசியம்.
வருகையை பதிவு செய்தல்
நீங்கள் ஒரு பெரிய நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, சிறிய கிராமத்தில் வாழ்ந்தாலும் சரி, நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளதை 14 நாட்களுக்குள் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
நீங்கள் செலுத்தும் வருமான வரி மற்றும் மருத்துவக் காப்பீட்டுப் பிரீமியம் ஆகியவை நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்துத்தான் முடிவு செய்யப்படும் என்பதால், இந்த பதிவு கட்டாயமாகும்.
பதிவு செய்வதற்கு, நீங்கள் உங்கள் அடையாள அட்டை, வெளிநாட்டவரானால், வாழிட/பணி அனுமதி மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான ஆதாரம் ஆகியவற்றைக் காட்டவேண்டியிருக்கும்.
மருத்துவக் காப்பீடு
மற்ற பல நாடுகளைப் போல இல்லாமல், சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீடு அனைவருக்கும் கட்டாயமாகும்.
சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வாழ முடிவு செய்துள்ள யாரும், சுவிட்சர்லாந்துக்குள் கால் வைத்து மூன்று மாதங்களுக்குள் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளவேண்டும்.
வானொலி / தொலைக்காட்சிப் பெட்டி உரிமம்
என்ன வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிக்கெல்லாம் உரிமமா? வேடிக்கையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுவும் சுவிட்சர்லாந்தில் கட்டாயம்!
ஏனென்றால், இந்த தொகையைப் பயன்படுத்தித்தான் சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் செலுத்தப்படுகிறது.
ஏனென்றால், இந்த தொகையைப் பயன்படுத்தித்தான் சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் செலுத்தப்படுகிறது.
செல்லப்பிராணிகள் வைத்திருக்கிறீர்களா?
உங்களிடம் செல்லப்பிராணிகள் இருக்குமானால், சுவிஸ் அரசியல் சாசனத்தில் விலங்குகள் நலன் ஒரு உரிமை என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
செல்லப்பிராணிகள் வைத்திருப்போர், சுவிஸ் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி சில விதிகளை பின்பற்றவேண்டும். முயல் போன்ற பிராணிகளை ஜோடியில்லாமல் தனியாக வளர்க்கக்கூடாது. வளர்ப்பு மீன்களை உயிருடன் டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்யக்கூடாது.
நாய் வைத்திருந்தால் அதற்கும் வரி செலுத்தவேண்டும். உயிருடன் லாப்ஸ்டர்களை கொதிக்கவைக்கக்கூடாது என பல்வேறு விதிகள் உள்ளன.
குப்பை கொட்டுவதற்கும் விதிகள்
- நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, குப்பை கொட்டுவதற்கென ஒழுங்குறைகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம் ஆகும்.
- உதாரணமாக, குப்பைகளை தரம் பிரிக்காமல் மொத்தமாக ஒரே குப்பை போடும் கவரில் போடுவது ஒரு குற்றம். அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
- குப்பை போடவதற்கென தனியாக விற்கப்படும் கவர்களில்தான் குப்பைகளை போடவேண்டும்.
- மறுசுழற்சி செய்ய இயலும் பொருட்களான PET போத்தல்கள், அட்டை, கண்ணாடி, காகிதம், முதலான பொருட்களை குப்பைக் கவர்களில் போட்டு வீசிவிடக்கூடாது.
- அவற்றை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கொண்டு கொடுக்கவேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றையெலாம் தெரிந்துகொண்டு அதன்படி நடந்துகொள்வது தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க பெரும் உதவியாக இருக்கும்.