வங்கக்கடலில் நாளை மாலை வலுப்பெறும் தீவிர புயல்- வானிலை மையம் எச்சரிக்கை
New storm to form tomorrow in the bay of bengal- தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை புயலாக மாறக்கூடும். மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 18ஆம் தேதி வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் மீட்புப் பணிகளுக்காக கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |