வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: மற்றொரு கூட்டாளி சிக்கினார்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அந்த வழக்கு தொடர்பில் புதிதாக ஒரு நபர் சிக்கியுள்ளார்.
வருங்கால கணவனை கொலை செய்த பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.
அவர் கேத்தனை கொலை செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
புதிய தகவல்
இந்நிலையில், சியாவின் காதலனான சேத்தன் சௌத்ரியுடன் படித்த ஒரு நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சியாவும் சேத்தன் சௌத்ரியும், கேத்தனை கொலை செய்த பிறகு, இந்த நபர் குற்றவாளிகள் இருவரையும் சந்தித்தாக கூறப்படுகிறது.
ஆகவே, அந்த நபருக்கு கேத்தன் கொலைத் திட்டம் குறித்து ஏற்கனவே தெரியுமா? சியாவும் சேத்தன் சௌத்ரியும் கேத்தனை கொலை செய்த பிறகு அவர் அவர்கள் இருவரையும் சந்தித்ததாகக் கூறப்படுவது உண்மையா, அவரிடம் ஆதாரம் எதையாவது அவர்கள் கொடுத்தார்களா என்பதை அறிவதற்காக பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |