வெளியானது புதிய சுவிஸ் பாஸ்போர்ட்: அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
சுவிஸ் பாஸ்போர்ட்டின் சமீபத்திய பதிப்பு வெளியாகியுள்ளது.
அதில் புதிதாக ஒரு சிறப்பம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான சிவப்பு நிறம் கொண்ட சுவிஸ் பாஸ்போர்ட்டின் சமீபத்திய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘fifth Switzerland’ என்று அழைக்கப்படும், வெளிநாடுகளில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கான விசாவுக்கென்றே புதிதாக ஒரு பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டை 2022, அக்டோபர் 31ஆம் திகதியிலிருந்தே ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாஸ்போர்ட்டைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டின் துவக்கத்தில் புதிய அடையாள அட்டையும் தயாராக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.