2026 பிப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தில் சில முக்கிய மாற்றங்கள் அமுலுக்குவருகின்றன.
அமுலுக்குவரும் முக்கிய மாற்றங்கள்
பால் விலையில் மாற்றம் பிப்ரவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் பால் விலை கிலோ ஒன்றிற்கு 0.04 சுவிஸ் ஃப்ராங்குகள் குறைந்து 0.78 சுவிஸ் ஃப்ராங்குகளாக ஆக உள்ளது.

சுவிட்சர்லாந்தில் எக்கச்சக்கமான பால் உற்பத்தி செய்யப்படுவதும், உலகம் முழுவதுமே பால் விலை குறைந்துவருவதுமே இந்த விலை குறைவுக்குக் காரணம்.
இரத்த தானம் தொடர்பிலான விதிகள்
பிப்ரவரி 1ஆம் திகதி முதல், இரத்த தானம் தொடர்பிலான கட்டுப்பாடுகள் பல நெகிழ்த்தப்பட்டுள்ளன.
மொபைல் போன்கள்
சுவிட்சர்லாந்தின் Valais மற்றும் Aargau மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் பயன்படுத்த தடை உள்ள நிலையில், Jura மாகாணத்திலும் பிப்ரவரி 1ஆம் திகதி முதல் அந்த தடை அமுலுக்கு வருகிறது.
சாலை வரி ஸ்டிக்கர்

2025ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட சாலை வரி ஸ்டிக்கர்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது. பிப்ரவரி 1ஆம் திகதி முதல், வாகனங்களில் 2026ஆம் ஆண்டுக்கான புதிய சாலை வரி ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கவேண்டும். அவை, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதிவரை செல்லுபடியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |