சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க புதிய விதிமுறைகள் அறிமுகம்...
பிரான்சில் சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது என் திட்டம்
இதுகுறித்துப் பேசிய பிரான்ஸ் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சரான Jean-Noel Barrot, இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களின்படி, ஆபாச இனையதளங்களைப் பார்க்க விரும்புவோர் ஒரு போன் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்யவேண்டியிருக்கும். அவர்களுக்கு அந்த அப்ளிக்கேஷன் ஒரு டிஜிட்டல் சான்றிதழையும், குறியீட்டையும் கொடுக்கும். மொத்தத்தில் சிறுவர்கள் ஆபாச இணையதளங்களை அணுகுவது கடினமாகிவிடும்.
முடிவுகட்டும் ஆண்டு
2023, நமது பிள்ளைகள் ஆபாச இணையதளங்களைப் பார்வையிடுவதற்கு முடிவுகட்டும் ஆண்டாகிவிடும் என்று கூறியுள்ளார் Jean-Noel Barrot.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகள், பிரான்சில் 15 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஆபாச இணையதளங்களைப் பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.