உடலில் பொருத்தக்கூடிய தொழில்நுட்பம் தயார்! இப்படியெல்லாம் செய்யலாமா?
தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ள காலக்கட்டத்தில் வாழ்கிறோம்! அதே நேரம் மேலும் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், பொது பயன்பாட்டுக்கு வருவதற்கு பல்வேறு சோதனை கட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது.
விரைவில் பயன்பாட்டுக்கு வருவதற்கான சோதனையில் உள்ள அசத்தலான ஒரு தொழில்நுட்பம் குறித்து காண்போம்.
உடலில் பொருத்தக்கூடிய தொழில்நுட்பம்
உங்களது உடல் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்களை அறியும் வகையிலான தொழில்நுட்பங்கள் உடலிலேயே பொருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியுமா?
எடுத்துக்காட்டாக, இதயத் துடிப்பை அளவிடும் இயர் பட்கள் (Ear Buds) மற்றும் ரத்த சர்க்கரையை அளவிட்டு கண்காணிக்க கூடிய காண்டாக்ட் லென்ஸ்கள் (contact lens) மற்றும் என்.எப்.சி எனப்படும் அருகாமை தகவல் தொடர்பு (Near Field Communication) மூலம் வீட்டின் கதவுகளை திறக்கும் வகையிலான டாட்டூக்கள் போன்றவை தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன.
இவை மக்களின் பயன்பாட்டுக்கும் வரும் பட்சத்தில் மருத்துவ துறையில் பல்வேறு புரட்சிகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.