Triumph-யின் முதல் குறைந்த விலை பைக்: Speed T4 இந்தியாவில் அறிமுகம்!
பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டிரையம்ப்(Triumph), தனது பிரபலமான ஸ்பீடு 400 மாடலின் (Triumph Speed 400) புதிய பதிப்பான ஸ்பீடு டி4(Triumph Speed T4)-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பைக்குகள், இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
குறைந்த விலையில் Triumph Speed T4
ஸ்பீடு 400-ஐ விட சற்று குறைந்த விலையில் ஸ்பீடு டி4 கிடைக்கும், ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் இயந்திரத்தைப் பெற்றிருந்தாலும், சில அம்சங்களில் இரண்டு வாகனங்களும் மாறுபடுகிறது.
Experience the joy of a relaxed ride with the all-new Speed T4, available at ₹ 2 17 000/- Ex Showroom Delhi. For those who seek a spirited ride, meet the MY25 Speed 400, priced at ₹ 2 40 000/- Ex Showroom Delhi.
— TriumphIndiaOfficial (@IndiaTriumph) September 17, 2024
To know more, visit : https://t.co/Bdj31Evg4f pic.twitter.com/3khRd8wYqa
இதில், வழக்கமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் அப்போலோ அல்லது MRF டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாடி கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல் ABS போன்ற முக்கிய அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.
Speed 400- புதுப்பிக்கப்பட்ட பதிப்பு
அதே நேரத்தில் ஸ்பீடு 400-லில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இரு மாடல்களும் பெர்ல் மெட்டாலிக் வெள்ளை, காக்டெயில் ஒயின் சிவப்பு மற்றும் பேந்தம் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.
New Post: Triumph Speed T4 and 2025 Speed 400 launched in India https://t.co/PkxqHvvEm1 pic.twitter.com/Zq08abZyt9
— GaadiKey (@GaadiKey) September 17, 2024
விலை
ஸ்பீடு டி4: ரூ. 2.17 லட்சம்(எக்ஸ்-ஷோரூம், சென்னை)
ஸ்பீடு 400: ரூ. 2.40 லட்சம்(எக்ஸ்-ஷோரூம், சென்னை)
முக்கிய அம்சங்கள்
398 சிசி இரட்டை சிலிண்டர் என்ஜின்
6-ஸ்பீடு கியர்பாக்ஸ்
லிட்டர் ஒன்றுக்கு 27 கிமீ மைலேஜ்
LED விளக்குகள்
டிஜிட்டல் கன்சோல்
யுஎஸ்பி போர்ட்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |