தவறுகளை ஒப்புக்கொண்ட பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர்! வரி உயர்வு குறித்து எச்சரிக்கை
குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்து, புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட்டை நியமித்தார் லிஸ் டிரஸ்.
வரி குறைப்பு அணுகுமுறை மாற்றியமைக்கபடும் என்று ஜெரமி கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அமைதிப்படுத்தும் முயற்சியில் தனது நண்பரான குவாசி குவார்டெங்கை பதவி நீக்கம் செய்துவிட்டு, புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட்டை நியமித்தார் பிரதமர் லிஸ் டிரஸ்.
இந்நிலையில், பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சரான ஜெரமி ஹன்ட் (Jeremy Hunt), இன்று முன்னதாக தனது பொறுப்பில் இருந்தவறால் தவறுகள் செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது வரி குறைப்பு அணுகுமுறையை மாற்றியமைக்கபடும் என்பதையும் தெரிவித்தார்.
பிரித்தானிய அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர் என்று அழைக்கப்படும் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சித் தலைமைப் போட்டியாளரான ஜெரமி ஹன்ட், டிரஸ் தனது நம்பகத்தன்மையை திரும்பப் பெற போராடுவதாகவும், மேலும் கடுமையான பொருளாதாரத்தை சமாளிக்க அனைத்து மாநிலத் துறைகளிலும் செலவினக் குறைப்புக்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
கடந்த மாத இறுதியில் குவார்டெங்கால் தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு 45-பைசா வரியை குறைப்பது இரண்டு தவறுகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரிகள் குறையப் போவதில்லை, மேலும் சில வரிகள் அதிகரிக்க வேண்டும். கூடுதல் செயல்திறன் சேமிப்புகளைக் கண்டறிய அனைத்து அரசுத் துறைகளையும் கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கு எதிராக வெற்றி பெறுவதற்காக லிஸ் டிரஸ் வரிகளைக் குறைப்பதாக செய்யப்பட பிரச்சாரத்தின் மையக் கருப்பொருள் இப்போது தலைகீழாக மாற்றப்படவுள்ளது.
லிஸ் டிரஸ் பிரச்சாரம் செய்த மினி-பட்ஜெட்டில் கொள்கைகளை அறிவித்ததற்காக க்வார்டெங்கை பணியில் இருந்து 38 நாட்களில் நீக்கப்பட்டார். நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட குழப்பத்திற்கு முழுப் பழியையும் அவர் மீது மாற்றும் முயற்சியாக இது கருதப்படுகிறது.