பெண்களுக்கென இன்ஸ்டாகிராமில் சூப்பர் அப்டேட்!
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் தான் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் வளர்ச்சி
ஆரம்பத்தில் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு,பகிர்ந்து கொள்ள தொடங்க இன்ஸ்டாகிராம் பின்னர் அடுத்தடுத்த அப்டேட்களால் பேஸ்புக்கை தாண்டி சென்றது.
தற்போது மெட்டாவின் கையில் உள்ள இன்ஸ்டாகிராம்,பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது அப்டேட்களை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அப்டேட் அநாமதேயர்களின் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது, பயனர்கள் தங்கள் Inbox பயன்பாட்டில் கூடுதல் அதிகாரம் பெறுவார்கள்.
புதிய அப்டேட்
எப்படி என்றால் அறிமுகம் இல்லாதவர்களின் நேரடி தகவல்களை இனி தவிர்க்க முடியும். தாங்கள் Follow செய்யாத பயனருக்கு, அநாமதேயர்கள் நேரடியாக message அனுப்புவதில் எண்ணிக்கை அடிப்படையில் கட்டுப்பாடுகள் அமுலாகும்.
அத்துடன் புகைப்படம், வீடியோ மற்றும் voice message ஆகியவற்றை முதல் message ஆக அநாமதேயர்கள் அனுப்புவதும் தடை செய்யப்படும்.
iStock
பெண்களுக்கு சிறந்த அப்டேட்
இந்த புதிய அப்டேட் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு சிறந்ததாக அமைந்துள்ளதால் பெற்றோர் இடையிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏனெனில் பரஸ்பரம் பின்தொடர்தல் இல்லாத பயனர்கள் இடையே, தனிப்பட்ட உரையாடலை தொடங்குவதற்கு முன்னர், ஒரேயொரு Message request மட்டுமே அனுப்ப இன்ஸ்டாகிராம் அனுமதிக்கும்.
மேலும் Text அடிப்படையில் மட்டுமே இயலும். அதற்கு எதிர்முனையில் இருப்பவர் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே உரையாடல் அடுத்த கட்டத்திற்கு நகர வாய்ப்பாகும்.
சுமார் 200 கோடிக்கும் அதிகமான Active பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம், இதன்மூலம் பயனர்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என நம்புவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |