உங்கள் தொலைபேசி அழைப்புகளின் இரைச்சல்களை நீக்கும் iOS 16.4 அப்டேட்!
ஆப்பிளின் இந்த சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்டானது அதாவது iOS 16.4 உங்கள் ஐபோனில் ஒரு தொகுதிக்கும் அதிகமான புதிய ஈமோஜிகளைக் கொண்டுவருகிறது.
புதிய இமோஜிகள்
இந்த அப்டே்டானது ஃபோன் அழைப்புகளுக்கு ஃபேஸ்டைமில் காணப்பட்ட அம்சமான குரல் இரைச்சலை நீக்கும் சேவையையும் வழங்குகிறது.
ஆப்பிள் 2021 இல் iOS 15 வெளியீட்டில் FaceTime அழைப்புகளுக்கு வாய்ஸ் Isolation மற்றும் Wide Spectrum ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
ஆனால் தொலைபேசி அழைப்புகளுக்கும் குரல் தனிமைப்படுத்தல் மட்டுமே கிடைக்கிறது.
இந்த அப்டேட்டை Enable செய்யும்போது குரல் தனிமைப்படுத்தல் மற்றும் உங்கள் ஃபோன் அழைப்பிற்கு இடையூறு விளைவிக்கும் பின்னணி இரைச்சல்களையும் இல்லாது செய்யும்.
இரைச்சல்களின்றி பேசலாம்!
மேலும், நீங்கள் வணிக அழைப்பில் பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதோ, உங்கள் வீட்டு நாயின் குறைக்கும் சத்தமோ அல்லது உங்கள் வீட்டிற்கு வெளியே கட்டுமானத்தால் ஏற்படும் சத்தத்தையோ நினைத்து நீங்கள் இனி கவலைப்பட தேவையில்லை.
குரல் தனிமைப்படுத்தலை இயக்க, நீங்கள் ஃபோன் அழைப்பில் இருக்க வேண்டும் மற்றும் இந்த அம்சத்தை செட்டிங்க்ஸில் கண்டறிய முடியாது.
ஆனால் இதனை நீங்கள் எனாபல் செய்ததும் அதனை Disable செய்யும் வரை அனைத்து அடுத்தடுத்த ஃபோன் அழைப்புகளுக்கும் அந்த அம்சம் ஒன்னிலே இருக்கும்.
எவ்வாறு இதனை பயன்படுத்தலாம்?
வரும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் தொலைப்பேசியின் Control Centre ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்கள் திரையின் மேல் வலது மூலையில் இருந்து கீழே Swipe செய்யவும்.
குரல் தனிமைப்படுத்தலை Enable செய்யவும்.
மேலதிக தகவல்: வேறொருவருடனான அழைப்பின் போது இந்த அம்சத்தை இயக்குவதற்குப் பதிலாக, மேலே உள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்களே அழைக்கலாம்.
மற்றும் குரல் தனிமைப்படுத்தலை இயக்கலாம்.
குரல் தனிமைப்படுத்தலை இல்லாது மேலே உள்ள அதே படிமுறைகளை பின்பற்றி, மைக் பயன்முறையில் Standard என்பதைத் தட்டவும்.
இது உங்கள் மைக்ரோஃபோனை அதன் இயல்புநிலை அமைப்பிற்குத் திருப்பிவிடும்.