தமிழ் பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ரா வெளியிட்ட புதிய புகைப்படங்கள்
தமிழ் பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் பும்ரா சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை சில தினங்களுக்கு முன்னர் மணந்தார்.
சஞ்சனா கணேசனின் பூர்வீகம் தமிழகம் தான். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
ஆனால், தற்போது மகாராஷ்டிராவின் புனேவில் தான் வசிக்கிறார்கள். இந்த நிலையில் பும்ரா மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடந்த சில நாட்களாக அற்புதங்கள் நடப்பது போன்ற உணர்வு உள்ளது.
எங்களுக்கு கிடைத்த அனைத்து அன்பிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
The last few days have been nothing short of absolutely magical! We are so grateful for all the love & wishes we’ve received. Thank you. pic.twitter.com/dhWH918Ytu
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 19, 2021