புத்தாண்டு கொண்டாட்டம் - காலி முகத்திடலில் கூடும் மக்களுக்கு விடுக்கப்பட்ட தடை!
2025 ஆம் ஆண்டை வரவேற்பதற்றாக இன்றைய தினம் காலிமுகத்திடல் கூடும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கூடும் மக்களுக்கு விடுக்கப்பட்ட தடை
2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலி முகத்திடல் வளாகத்திற்கு வருகை தருவார்கள்.
இங்கு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால் பல மக்கள் வருகை தருவார்கள். அதனை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு நகரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், புறக்கோட்டை, கொம்பனித் தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத் தோட்டம் போன்ற பொலிஸ் பிரிவுகளில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இன்றைய தினம் காலி முகத்திடலில் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும், வாகனங்கள் நிறுத்துவதற்காக வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |