பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் சிலவற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து: அதிர்ச்சிப் பின்னணி
தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் சிலவற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸில் இசை நிகழ்ச்சி ரத்து
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், புத்தாண்டுக்கு முந்தைய இரவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்று பொலிசார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும், ஜப்பானின் டோக்கியோவிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒத்திகை பார்த்த கும்பல்
கைது விடயம் என்னவென்றால், அச்சுறுத்தல்கள் உள்ளதை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பாலைவனத்தில் ஒரு கும்பல் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது தாக்குதல் நடத்துவதற்காக ஒத்திகை பார்த்துள்ளது.

அதைத் தொடர்ந்து அந்தக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
விசாரணையில், அவர்கள் பல இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |