புத்தாண்டு கொண்டாட்டங்கள்... பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்த பிரான்ஸ்: முழுமையான தகவல்
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நடுவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.
பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிசார்
குறித்த தகவலை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் 6,000 பொலிசார் களமிறக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
@reuters
அத்துடன் 5,000 ராணுவ வீரர்களும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளில் நடந்துவரும் போரின் எதிரொலியாக பிரான்ஸில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமைச்சர் டார்மானின் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படும்
பாரிஸ் கோடைகால ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் உள்ளிட்டவை முன்னெடுக்க இருப்பதால் கடந்த ஆண்டை விட பாரிஸ் நகரின் தெருக்களில் அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
@reuters
மேலும், பாரிஸின் சில பகுதிகளில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அரசியல் சார்புடைய பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் பொதுமக்கள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புள்ள எந்த பொருட்களும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் அனுமதிக்கப்படாது என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் கண்காணிப்புக்கு என மட்டும் பயன்படுத்தப்படும், பொதுமக்கள் பயயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |