நான் செய்தது தவறு... வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்சில், தான் முன்கூட்டியே தேர்தல் அறிவித்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி.
நான் செய்தது தவறு...
ஜூன் மாதம் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
அவரது முடிவு நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உருவாக்கியது.
தேர்தல் முடிவுகளோ, அதைவிட கூடுதல் அதிர்ச்சியை ஜனாதிபதி மேக்ரானுக்கே திருப்பிக் கொடுத்தன.
ஆம், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டு பிறப்பதற்கு முன் மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய மேக்ரான், தான் முன்கூட்டியே தேர்தல் அறிவித்தது தவறு என்று கூறியுள்ளார்.
தனது முடிவால் அமைதியின்மையும் நிலையற்ற தன்மையும்தான் உருவாகின என்றும், நாடாளுமன்றத்தைக் கலைத்ததால் பிரான்ஸ் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைப்பதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் அதிக பிரிவினைகள்தான் ஏற்பட்டன என்றும் கூறியுள்ள மேக்ரான், அதற்கு முழுப்பொறுப்பும் தான்தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |