நியூயார்க் நகரை நடுங்கவைத்த 27 வயது நபர்... அதிகரித்த இறப்பு எண்ணிக்கை
நியூயார்க் நகரில் மிட் டவுன் மன்ஹாட்டன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொலிஸ் அதிகாரி உட்பட நால்வரைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயங்கள் காரணமாக
கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து துப்பாக்கிதாரி ஷேன் தமுரா என்வர் என அடையாளம் கண்டுள்ள நிலையில், அந்த நபரும் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் NYPD அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக CNN செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. பார்க் அவென்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் அபாயகரமான துப்பாக்கியுடன் ஒருவர் நடந்து செல்வது கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
இதனிடையே, நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மரணமடைந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் டெவோன் தமுரா என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
33வது மாடிக்குச் செல்வதற்கு முன்பு, துப்பாக்கிதாரி உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணியளவில் கட்டிடத்தின் லாபியில் NYPD அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்று அதிகாரி ஒருவர் CNN செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.
அதே அதிகாரி கூறுகையில், துப்பாக்கிதாரி ஒரு படிக்கட்டில் இறந்து கிடந்ததாகவும், அதில் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |