பரபரப்பாக தொடங்கிய முதல் டெஸ்ட்.. அடித்து நொறுக்கிய ஆண்டர்சன்! சுருண்ட நியூசிலாந்து
லண்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனின் மிரட்டல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் லாதம் மற்றும் வில் யங்கை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் ஆக்கினார்.
அதன் பின்னர் அறிமுக வீரர் மாட்டி போட்ஸின் பந்துவீச்சில் கேன் வில்லியம்சன் அவுட் ஆகி நடையை கட்டினார். அதனைத் தொடர்ந்து ஆண்டர்சன்-போட்ஸ் பந்துவீச்சு கூட்டணியில் விக்கெட்டுகளை அள்ளியது. கிராண்ட்ஹோம் மட்டும் 42 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தால் நியூசிலாந்து அணி 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
Bowlers dominate on day one ?
— England Cricket (@englandcricket) June 2, 2022
??????? #ENGvNZ ?? | @LV pic.twitter.com/t7pg4XxvO7
Photo Credit: Twitter (@BLACKCAPS)
ஆஷஸ் தொடரில் சொதப்பிய ஆண்டர்சன், நேற்றைய இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 16 ஓவர்கள் வீசிய அவர் 6 ஓவர்களை மெய்டனாக்கினார். மேலும் போட்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
Photo Credit: Twitter (@englandcricket)
Photo Credit: Twitter (@englandcricket)
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கிரவ்லி 43 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றோரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் 25 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரிய தொடங்கின.
Photo Credit: Twitter (@BLACKCAPS)
Photo Credit: Twitter (@englandcricket)
இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் பந்துவீச்சு இருந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட், சௌதி, ஜேமிசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Photo Credit: Twitter (@BLACKCAPS)