91 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து: உலகக்கிண்ண தோல்விக்கு தென் ஆப்பிரிக்கா தரமான பதிலடி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 91 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கான்வே 1 ரன்னில் அவுட்
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தொடங்கியது.
டேவன் கான்வே 1 ரன்னில் கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் டாம் லாதமும் 7 ஓட்டங்களில் அவரது பந்துவீச்சிலேயே வெளியேறினார்.

91 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் நீஷம் 26 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை தவிடுபொடியாக்கிய நியூசிலாந்து, 14.3 ஓவர்கள் வரையே தாக்குப்பிடித்து 91 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மோகோயனா 3 விக்கெட்டுகளும், கோட்ஸி, பார்ட்மன் மற்றும் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |