ஒருநாள் போட்டியில் 198 ஓட்டங்களில் சுருண்ட நியூஸிலாந்து: அதிர்ச்சி கொடுத்த வங்காளதேச வீரர்
வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
விக்கெட்டுகள் சரிவு
நியூஸிலாந்து, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
Abbas gone! 😮🔥 Nahid Rana strikes for his third wicket of the spell 🐅🏏#BCB #Cricket #ODI #NewZealand #Tigers pic.twitter.com/OUnfBpyy2l
— Bangladesh Cricket (@BCBtigers) April 20, 2026
நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. ஹென்றி நிக்கோல்ஸ் 13 ஓட்டங்களில் இருந்தபோது நாஹித் ராணா பந்துவீச்சில் lbw ஆனார்.
அடுத்து வந்த வில் யங்கும் 2 ஓட்டங்களில் அவரது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் நிக் கெல்லி (Nick Kelly) நிதானமாக நின்று ஆட, டாம் லாதம் (14), முஹம்மது அப்பாஸ் (19), ஃபோக்ஸ்கிராப்ட் (15) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

நிக் கெல்லி அரைசதம்
மறுபுறம் நிக் கெல்லி அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 145 ஆக இருந்தபோது நிக் கெல்லி 83 ஓட்டங்கள் (14 பவுண்டரிகள்) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகள் சரிய நியூஸிலாந்து அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக விளங்கிய நாஹித் ராணா (Nahid Rana) 5 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |