134 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து: இந்திய அணி மிரட்டல் பந்துவீச்சு
New zealand allout for 134 runs: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 134 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சு
வெல்லிங்டனில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து 134 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, துடுப்பாட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பிரார்
தொடக்க வீரர் டிம் செய்பெர்ட் டக்அவுட் ஆக, வில் யங் 6 ஓட்டங்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
டாம் லாதம் (7), க்ளென் பிலிப்ஸ் (0) ஆகியோர் சொதப்ப டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் குவித்தார். அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 38 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய குர்நூர் பிரார் (Gurnoor Noor) 4 விக்கெட்டுகளும், அன்ஷுல் காம்போஜ், ஆகிப் நபி மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
