89 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா; 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
new zealand beat india by 244 runs in 4th odi: நியூசிலாந்திற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆன நிலையில், 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
89 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மாங்கனேயில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 333 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் அதிபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் Will Young 125 ஒட்டங்கள் குவித்தார்.

334 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட்களை இழந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் என மூவரும் டக் அவுட் ஆக, ருதுராஜ் கெய்க்வாட் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற மோசமான நிலையில் இந்திய அணி இருந்த நிலையில், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன்(27), அக்சர் படேல்(21), நமன் தீர்(21) நிதானமாக ஆடி ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ஓட்டங்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹன்றி 6 விக்கெட்களும், Matthew Fisher 3 விக்கெட்களும் கைப்பற்றினர்.
இதன் மூலம், நியூசிலாந்து அணி 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட ODI தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
4வது ODI போட்டியில் நியூசிலாந்து வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடர் உள்ளது.
5வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் டௌரங்காவில் நடைபெற உள்ளது.