360 ஓட்டங்கள் குவிப்பு! ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து
டப்லினில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்லினில் நேற்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மார்ட்டின் கப்தில் 115 ஓட்டங்கள் விளாசினார்.
ஆலன் 33 ஓட்டங்களும், கேப்டன் லாதம் 30 ஓட்டங்களும் தங்கள் பங்குக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டிய நிக்கோல்ஸ் 54 பந்துகளில் 79 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 30 பந்துகளில் 47 ஓட்டங்களும் விளாசினார்.
PC: Twitter (@BLACKCAPS)
நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஸுவா லிட்டில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது.
பவுல் ஸ்டெர்லிங் அதிரடியில் மிரட்டினார். அவர் 103 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டர் சதம் விளாசினார்.அவர் 108 ஓட்டங்களில் சான்டனர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்டியதால், அயர்லாந்து அணி இலக்கை வேகமாக நெருங்கியது.
PC: Twitter (@BLACKCAPS)
எனினும் ஹென்றி, சான்டனர் இருவரும் பந்துவீச்சில் மிரட்டினர். பரபரப்பாக நடந்த போட்டியில் அயர்லாந்து அணி 359 ஓட்டங்கள் எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
PC: Twitter (@BLACKCAPS)
கடைசி ஓவரை அபாரமாக வீசிய டிக்னர் 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஹென்றி 4 விக்கெட்டுகளையும், சான்டனர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
PC: Twitter (@BLACKCAPS)
PC: Twitter (@BLACKCAPS)
PC: Twitter (@BLACKCAPS)