189 ஓட்டங்களை இலக்கினை எட்ட போராட்டம்..1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது.
188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி பார்படோஸில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அமிர் ஜங்கூ 51 ஓட்டங்களும், மோட்டி 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஃபிஷர் 3 விக்கெட்டுகளும், சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், லென்னொக்ஸ் மற்றும் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மார்க் சாப்மேன்
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்க் சாப்மேன் (Mark Chapman) நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
அவர் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அணியை காப்பாற்ற போராடிய அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) 45வது ஓவரில் 1 ரன் எடுக்க, நியூஸிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |