வெளிநாடு சென்ற கனேடிய பெண்ணின் பையிலிருந்த பரிசுப்பொருள்: உண்மை வெளியானபோது
நியூசிலாந்துக்கு விமானத்தில் பயணித்த கனேடிய பெண்ணொருவர், தனது கைப்பையில் போதைப்பொருட்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பையில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய பெண்
ஞாயிற்றுக்கிழமை, 29 வயதுடைய கனேடிய பெண்ணொருவர் கனடா வான்கூவர் விமான நிலையத்தில் விமானம் ஏறி நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து விமான நிலையத்தில் சென்று இறங்கியுள்ளார்.
ஆக்லாந்து விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அந்தப் பெண்ணின் கையிலிருந்த கைப்பையை பரிசோதித்துள்ளார்கள்.
அப்போது பைக்குள் பரிசு கொடுப்பதற்காக பேக் செய்யப்பட்டவை போன்ற சில பாக்கெட்கள் இருந்துள்ளன.
அவற்றை அதிகாரிகள் சோதித்தபோது, அவற்றில் போதைப்பொருள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளைக் கையில் வைத்துக்கொண்டு சாதாரணமாக விமான நிலையம் வந்த அந்தப் பெண்ணை உடனடியாக கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடரும் நிலையில், அவரது பெயர் முதலான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |