நியூசிலாந்தில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதியினர்! பொலிஸார் தீவிர விசாரணை
நியூசிலாந்தில் பிரித்தானிய தம்பதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் பிரித்தானிய தம்பதி மரணம்
ரோஸ்னெத் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணங்கள் கொலை-உயிரை மாய்த்துக் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெலிங்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பென் மற்றும் கிளேர் ஆண்டர்சன் (Ben and Claire Anderson) தம்பதியினர், திங்களன்று காவல்துறையினர் அவர்களின் இல்லத்திற்கு நலம் விசாரிப்புக்காக சென்றபோது சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த பிரித்தானிய தம்பதி கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்திலிருந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
காவல்துறை கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக வேறு எந்த சந்தேக நபர்களையும் காவல்துறை தேடவில்லை என புலனாய்வு அதிகாரி ஹேலி ரியான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் தூதரக உதவிக்கான கோரிக்கையை பெறவில்லை என்றாலும், வெளிநாட்டில் உள்ள பிரித்தானிய குடிமக்களுக்கு உதவ தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |