10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! டி20 உலகக்கிண்ணத்தில் தெறிக்கவிட்ட நியூசிலாந்தின் இருவர்
டி20 உலகக்கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது.
முஹம்மது வசீம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் முஹம்மது வசீம் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 66 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), அலிஷான் ஷரஃபு 55 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினர்.

செய்பெர்ட், ஆலன் அதிரடி
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் செய்பெர்ட், ஃபின் ஆலன் இருவரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.

இந்த கூட்டணியின் மூலம் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 175 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிம் செய்பெர்ட் (Tim Seifert) 42 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்களும், ஃபின் ஆலன் (Finn Allen) 50 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்களும் விளாசினர்.

செய்பெர்ட், ஆலன் குவித்த 175 ஓட்டங்கள், டி20 உலகக்கிண்ணப் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |