தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட 23 வயது வீரர்கள்
முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
ராபின்சன், ஜேக்கப்ஸ் அதிரடி
ஹராரேயில் நடந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 9 ஓட்டங்களில் வெளியேற, செய்பெர்ட் 22 (16) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த டேர்ல் மிட்செல் (5), மிட்செல் ஹே (2) மற்றும் ஜேம்ஸ் நீஷம் (0) ஆகியோர் சொதப்பினர்.
எனினும் இளம் வீரர்களான டிம் ராபின்சன், பெவோன் ஜேக்கப்ஸ் அதிரடியில் மிரட்ட நியூசிலாந்து 173 ஓட்டங்கள் குவித்தது.
டிம் ராபின்சன் (Tim Robinson) 57 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்களும், பெவோன் ஜேக்கப்ஸ் (Bevon Jacobs) 30 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 44 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸ் 16 (12) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்ட, லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ் 17 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார்.
ஜேக்கப் டுஃபி மிரட்டல்
டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) அதிரடியாக 18 பந்துகளில் 35 ஓட்டங்களும், ஜார்ஜ் லிண்டே (George Linde) 20 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர்.
ஆனால் ஏனைய வீரர்கள் மேட் ஹென்றி (Matt Henry), ஜேக்கப் டுஃபி (Jacob Duffy) பந்துவீச்சில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மேட் ஹென்றி, ஜேக்கப் டுஃபி தலா 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், சான்ட்னர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Victory in our opening match of the T20I Tri-Series! 3 wickets each for Jacob Duffy (3-20) & Matt Henry (3-34) to seal the win. Scorecard | https://t.co/l3wSeLKNuJ #SAvNZ #CricketNation 📷 = Zimbabwe Cricket pic.twitter.com/TrbCdYD2ff
— BLACKCAPS (@BLACKCAPS) July 16, 2025
From 70 for 5 in 9.3 overs, Tim Robinson and Bevon Jacobs take New Zealand to 173.
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 16, 2025
A match-winning total? https://t.co/PG8LeJMLec #NZvSA pic.twitter.com/Qe85emINPN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |