லண்டன் ரயில் விபத்து இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தையை உயிருடன் மீட்ட ஹீரோ!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் நடந்த ரயில் விபத்து இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தையை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை Salisbury-ல் உள்ள Great Western ரயில் பாதை மற்றும் தென் மேற்குப் பாதையில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரயில் விபத்தில் சிக்கிய Corinna Anderson என்ற பயணி கூறியதாவது, ஒரு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதிய போது பயங்கர சத்தம் கேட்டது.
விபத்துக்குள்ளான ரயில் இடிபாடுகளிலிருந்து பிறந்து 3 வாரமே ஆன குழந்தையை மீட்டு, தீயணைப்பு வீரர் தனது தோளில் தூக்கிக்கொண்டு வந்ததை நான் பார்த்தேன்.
பின் அந்த குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதையும் நான் பார்த்தேன், குழந்தையும் தாயும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் என Corinna Anderson கூறினார்.
இந்நிலையில், குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரரை பலர் பாராட்டி வருகின்றனர்.