வெறும் 1 பவுண்டு கட்டணத்தில் சொந்தமாக வீடு வாங்கலாம்: பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம்
பிரித்தானியாவில் வெறும் 1 பவுண்டு தொகையில் வீடு வாங்கலாம் என்ற புதிய திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
300 குடியிருப்புகள் தயார் நிலையில்
பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் 300 குடியிருப்புகள் தற்போது இந்த திட்டத்தின் கீழ் தயார் நிலையில் உள்ளது. மேலும், 2, 3 மற்றும் 4 படுக்கையறை கொண்ட வீடுகள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விற்பனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 25 ஆண்டுகள் வாடகைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னரே, அந்த குடியிருப்பை தொடர்புடைய வாடகைதாரர்கள் 1 பவுண்டு தொகையில் சொந்தமாக வாங்க முடியும்.
மட்டுமின்றி, வாடகைதாரர்கள் முதல் 20 ஆண்டுகளுக்குள் திட்டத்தை விட்டு வெளியேறினால், தங்கள் பிரீமியத்தை பணமாக பெற்றுக் கொள்ளலாம். கட்டுமான நிறுவனமான Willmott Dixon இந்த புதிய திட்டத்தின் கீழ் 266 குடியிருப்புகளை நிறுவ இருக்கிறது,
Credit: BPM
மக்கள் குடியேறியுள்ளனர்
சில குடியிருப்புகள் கட்டுமானத்தில் உள்ளது, பல குடியிருப்புகளில் மக்கள் குடியேறியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது. 26 வயதான ஜேம்ஸ் டெய்லர் புதிய இந்த திட்டத்தின் கீழ் தமது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.
அருமையான பகுதி என குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை சிக்கல் ஏதும் ஏற்படும் என்ற அச்சம் தமக்கு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 34 மில்லியன் பவுண்டுகள் தொகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகர நிர்வாகம் சுமார் 5.5 மில்லியன் பவுண்டுகள் வரையில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.