பிரித்தானியாவில் பணத்தை கையாடல் செய்து சிக்கிய இலங்கையர்: வெளியான முழு பின்னணி

Crime
By Arbin Aug 25, 2022 06:15 PM GMT
Report

நியூகேஸில் நகர சபைக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் உட்பட பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள்

நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குற்றவாளி என கண்டறியப்பட்டார்

பிரித்தானியாவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் அலுவலக மேலாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 14,000 பவுண்டுக்கும் அதிகமான தொகையை கையாடல் செய்து சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த தொகையில் அவர் தமது IVF சிகிச்சை, கவுன்சில் வரி மற்றும் பல்கலைக்கழகத்தில் அவரது மருமகனுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பணத்தை கையாடல் செய்து சிக்கிய இலங்கையர்: வெளியான முழு பின்னணி | Newcastle Worker Cheated Charity Pleaded Guilty

@Newcastle Chronicle

தற்போது செயல்பாட்டில் இல்லாத BAME என்ற தொண்டு நிறுவனத்தில் அலுவலக மேலாளராக கடந்த 2000 ஆண்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார் Milanthi Welamedage.

இந்த நிலையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்காக சுமார் 1,725 பவுண்டுகள் வரை மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, 2014ல் மோசமான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தணிக்கையில், நியூகேஸில் நகர சபைக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் உட்பட மிலந்தி முன்னெடுத்த பல சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் தீவிரமான விசாரணையில், குறித்த காசோலைகள் மிலந்தியின் கென்டனில் அமைந்துள்ள குடியிருப்புக்கான கவுன்சில் வரி செலுத்த பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.

மொத்தம் 69 காசோலைகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதும், ஏப்ரல் 2013 மற்றும் ஜூலை 2014 வரையான காலகட்டத்தில் மொத்தம் 14,535 பவுண்டுகள் தொகையை குறித்த தொண்டு நிறுவனத்தில் இருந்து மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பணத்தை கையாடல் செய்து சிக்கிய இலங்கையர்: வெளியான முழு பின்னணி | Newcastle Worker Cheated Charity Pleaded Guilty

@ncjMedia

குறித்த மோசடி செய்யப்பட்ட தொகையில் பல்கலைக்கழக கல்விக்காக இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்துள்ள மருமகனுக்கும், தமது IVF சிகிச்சைக்காகவும் மிலந்தி பயன்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடந்த மாதம் குற்றவாளி என கண்டறியப்பட்டார். தற்போது 58 வயதாகும் மிலந்திக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் 60 மணி நேரம் ஊதியமற்ற பணி செய்யவும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் போது நீதிபதி தெரிவிக்கையில், நீங்கள் மிகவும் நம்பகமான பணியாளராக இருந்தீர்கள் மட்டுமின்றி குறிப்பிடத்தக்க பொறுப்பான பதவியிலும் இருந்துள்ளீர்கள். ஆனால் இது நம்பிக்கை மீதான துஷ்பிரயோகம் எனவும் நீங்களே உங்களுக்கு அவமானத்தை கொண்டு வந்தீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெருமூளை வாதம் கொண்ட ஒரு இளம் மகனை வைத்துக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுள்ளீர்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US