புதுமணத் தம்பதி ரயிலில் இருந்து விழுந்து மரணம்! வெளியான வீடியோவால் அதிர்ச்சி
இந்திய மாநிலம் ஆந்திராவில் புதுமணத் தம்பதி, ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
புதுமணத் தம்பதி
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி சிம்மாசலம் (25) மற்றும் பவானி (18). இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. 
இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்த புதுமணத் தம்பதி, வாங்கப்பள்ளி அருகே ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அந்த கோணத்தில் இதுதொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
சந்தேகத்தை கிளப்பிய வீடியோ
ஆனால், தற்போது தம்பதி குறித்து வெளியான வீடியோ ஒன்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சிம்மாசலமும், பவானியும் ரயிலில் சண்டையிடுவதை மற்றொரு பயணி வீடியோ எடுத்துள்ளார்.
இதனால், அவர்கள் இருவரும் ரயிலின் வாயிலில் நின்று வாக்குவாதம் செய்தபோது கீழே விழுந்தார்களா? அல்லது சண்டையால் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து தற்கொலையா? என பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |